குறள் : 1004
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
மு.வ உரை :
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
கலைஞர் உரை :
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
சாலமன் பாப்பையா உரை :
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?
Kural 1004
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan
Explanation :
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
Horoscope Today: Astrological prediction for January 26 2022
இன்றைய ராசிப்பலன் - 26.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
26-01-2023, தை 12, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 10.28 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.56 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். வஸந்த பஞ்சமி (வாக்கியம்). முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 10.46 மணி முதல் 11.22 மணி வரை.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 26.01.2023 | Today rasi palan - 26.01.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
ரிஷபம்
இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கடகம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
கன்னி
இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
விருச்சிகம்
இன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
தனுசு
இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
மகரம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். எடுத்த காரியம் எளிதில் முடியும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001