குறள் : 1002

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு


மு.வ உரை :

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

கலைஞர் உரை :

யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்

சாலமன் பாப்பையா உரை :

பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.


Kural 1002

Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum

Marulaanaam Maanaap Pirappu

Explanation :

He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.

Horoscope Today: Astrological prediction for January 24 2022



இன்றைய ராசிப்பலன் - 24.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

24-01-2023, தை 10, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 03.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் இரவு 09.57 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 24.01.2023 | Today rasi palan - 24.01.2023

மேஷம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

ரிஷபம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மிதுனம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியுடன் உங்களுக்கிருக்கும் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வண்டி, வாகனத்தில் நிதானமாக செல்வது நல்லது.

சிம்மம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் வரும்.

மீனம்

இன்று உறவினர்கள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் பணிசுமை அதிகரித்து மனநிம்மதி குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001