குறள் : 1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.


மு.வ உரை :

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம் வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

கலைஞர் உரை :

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்

சாலமன் பாப்பையா உரை :

நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.


Kural 1000

Panpilaan Petra Perunjelvam Nanpaal

Kalandheemai Yaaldhirin Thatru

Explanation :

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.


Horoscope Today: Astrological prediction for January 22 2022



இன்றைய ராசிப்பலன் - 22.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


22-01-2023, தை 08, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு 10.28 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.21 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 03.21 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 22.01.2023 | Today rasi palan - 22.01.2023


மேஷம்

இன்று உங்களுக்கிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

ரிஷபம்

இன்று தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் வகையில் அனுகூலப் பலன் உண்டாகும்.

துலாம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பணவிஷயத்தில் சிக்கனமாக செயல்படவும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். 

கும்பம்

இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001