குறள் : 996

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.


மு.வ உரை :

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

கலைஞர் உரை :

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்

சாலமன் பாப்பையா உரை :

பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.


Kural 996

Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel

Manpukku Maaivadhu Man

Explanation :

The (way of the) world subsists by contact with the good if not it would bury itself in the earth and perish.


Horoscope Today: Astrological prediction for January 17 2022



இன்றைய ராசிப்பலன் - 17.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


17-01-2023, தை 03, செவ்வாய்க்கிழமை, தசமி திதி மாலை 06.05 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் மாலை 06.46 வரை பின்பு அனுஷம். மரணயோகம் மாலை 06.46 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. காணும் பொங்கல். திருக்கணித, சனிப்பெயர்ச்சி மாலை 6.04. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 17.01.2023 | Today rasi palan - 17.01.2023

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பண பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

துலாம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

தனுசு

இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.

மகரம்

இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 01.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாகவும் சிக்கனமாகவும் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001