குறள் : 994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
மு.வ உரை :
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
கலைஞர் உரை :
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்
சாலமன் பாப்பையா உரை :
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
Kural 994
Nayanotu Nandri Purindha Payanutaiyaar
Panpupaa Raattum Ulaku
Explanation :
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.
Horoscope Today: Astrological prediction for January 15 2022
இன்றைய ராசிப்பலன் - 15.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
15-01-2023, தை 01, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.46 வரை பின்பு தேய்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் இரவு 07.11 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. உத்தராயண புண்யகாலம். பொங்கல் பண்டிகை. பைரவர் வழிபாடு நல்லது. பொங்கல் வைக்க காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை, மதியம் 02.00 மணி முதல் 04.00 மணி வரை, கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.|
இன்றைய ராசிப்பலன் - 15.01.2023 | Today rasi palan - 15.01.2023
மேஷம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.
ரிஷபம்
இன்று இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகி முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் குறையும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் உண்டாகும்.
கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.
மகரம்
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001