குறள் : 992

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு


மு.வ உரை

அன்புடையவராக இருத்தல்  உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்


கலைஞர் உரை

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகு


சாலமன் பாப்பையா உரை

எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்


Kural 9

Anputaimai Aandra Kutippiraththal Ivvirantu

Panputaimai Ennum Vazhakk


Explanation

Affectionateness and birth in a good family  these two constitute what is called a proper behaviour to all


Horoscope Today: Astrological prediction for January 13 2022



இன்றைய ராசிப்பலன் - 13.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


13-01-2023, மார்கழி 29, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி மாலை 06.17 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திரம் நட்சத்திரம் மாலை 04.35 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் மாலை 04.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 13.01.2023 | Today rasi palan - 13.01.2023

மேஷம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். 

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கடகம்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். 

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். 

துலாம்

இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் பெருகும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001