குறள் : 988

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

திண்மை உண் டாகப் பெறின்.


மு.வ உரை :

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

கலைஞர் உரை :

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல

சாலமன் பாப்பையா உரை :

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.


Kural 988

Inmai Oruvarku Ilivandru Saalpennum

Thinmai Un Taakap Perin

Explanation :

Poverty is no disgrace to one who abounds in good qualities.


Horoscope Today: Astrological prediction for January 09 2022



இன்றைய ராசிப்பலன் - 09.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


09-01-2023, மார்கழி 25, திங்கட்கிழமை, துதியை திதி காலை 09.40 வரை பின்பு தேய்பிறை திரிதியை. நாள் முழுவதும் ஆயில்யம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. நவகிரக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 09.01.2023 | Today rasi palan - 09.01.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். கொடுத்த கடன்களை பெறுவதில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

கடகம்

இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

துலாம்

இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வண்டி, வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை.

மகரம்

இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001