குறள் : 980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.


மு.வ உரை :

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும் சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்

கலைஞர் உரை :

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்

சாலமன் பாப்பையா உரை :

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்?களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.


Kural 980

Atram Maraikkum Perumai Sirumaidhaan

Kutrame Koori Vitum

Explanation :

The great hide the faults of others the base only divulge them.




Horoscope Today: Astrological prediction for January 01 2023


இன்றைய ராசிப்பலன் - 01.12.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

01-01-2023, மார்கழி 17, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 07.12 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.48 வரை பின்பு பரணி. சித்தயோகம் பகல் 12.48 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 01.01.2023 | Today rasi palan - 01.01.2023

மேஷம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கடகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சு வார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

துலாம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

தனுசு

இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். 

கும்பம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

மீனம்

இன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001