Driver arrested for transporting lake soil in lorry near Walaja
வாலாஜாபேட்டையை அடுத்த மருதாலம் கூட்ரோடு ஏரிக்கரை பகுதியில் வாலாஜா போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரியில் மூன்று டன் ஏரி மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து லாரி டிரைவர் தானியூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த பலராமன் மகன் முனிசாமி (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
லாரியில் வந்த மருதாலத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.