A case has been registered against the person who provided place to drink liquor near Ocheri
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் பகுதியில் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாமண்டூர் புதுகால்வாய் அருகிலுள்ள மாட்டு இறைச்சி பக்கோடா கடையின் பின்புறத்தில் மது அருந்த இடம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் கரிவேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.