வேலூர் மாநகராட்சியில் இன்று நடைபெற இருந்த புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் 5வது முறையாக தள்ளி வைக்கபட்டது.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆவின், காவல் துறை, போக்குவரத்து கழகத்தினர் பயன்பாடுகள் தவிர மீதமுள்ள 74 கடைகள் வணிக நோக்கத்திற்காக ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்து வருகின்றனர்.

ஏற்கனவே 4 முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட் டது. இதற்கிடையில், இன்று புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த நிர்வாக காரணங்களால் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் ரத்தாகி உள்ளது.

மீண்டும் வரும் 27ம் தேதி புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.