குறள் : 984

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.


மு.வ உரை :

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.


கலைஞர் உரை :

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு


சாலமன் பாப்பையா உரை :

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.


Kural 984

Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai

Sollaa Nalaththadhu Saalpu

Explanation :

Penance consists in the goodness that kills not and perfection in the goodness that tells not others faults.


Horoscope Today: Astrological prediction for January 05 2022


இன்றைய ராசிப்பலன் - 05.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


05-01-2023, மார்கழி 21, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.14 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 09.26 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 05.01.2023 | Today rasi palan - 05.01.2023

மேஷம்

இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வேலையில் பணிச்சுமை குறையும். 

ரிஷபம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புத்திர வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக சாதகமான பலனை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தூர பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

தனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடையலாம்.

மீனம்

இன்று நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001