குறள் : 983

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்.


மு.வ உரை :

அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

கலைஞர் உரை :

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்

சாலமன் பாப்பையா உரை :

மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.


Kural 983

Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu

Aindhusaal Oondriya Thoon

Explanation :

Affection fear (of sin) benevolence favour and truthfulness these perfect are the five pillars on which goodness rests.

Horoscope Today: Astrological prediction for January 04 2022


இன்றைய ராசிப்பலன் - 04.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


04-01-2023, மார்கழி 20, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 12.01 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ரோகிணி நட்சத்திரம் மாலை 06.48 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 04.01.2023 | Today rasi palan - 04.01.2023

மேஷம்

இன்று பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் சில தடங்கலுக்குப் பின் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். பொருளாதார பிரச்சினைகள் நீங்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு உள்ள நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த விஷயத்திலும் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001