ராணிப்பேட்டையில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2023-2024ம் கல்வி யாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங் கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் 'www. skilltraining.tn.gov.in', 'http://www.skilltraining.tn.gov.in' என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2023-24ம் கல்வி ஆண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணம் 75 ஆயிரம் மற்றும் ஆய்வுக் கட்டணம் 78 ஆயிரம் செலுத்த வேண்டும். பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்ப டும். அங்கீகாரம் குறித்த தகவல்கள் மற்றும் அறுவுரைகளை www.skilltraining.tn.gov.in 67 GOT D 60 600T என்றணையதளம் மூலமாகவும், மேலும் விவரங்களுக்கு detischennai@gmail.com, mailto:detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விவரங்கள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.