கலவையை அடுத்த மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவின் அருகே நேற்று மாலை 4 மணி அளவில், கற்பகம் (வயது 57), ராணி (45), துர்கா (32), நித்தியா (34), ரேணுகா (19), கோவிந்தசாமி (49) ஆகிய 6 பேர் அந்தப்பகுதியில் சென்றுள்ளனர். அப்போது முட்புதரில் இருந்த குளவிகள் அவர்கள் 6 பேரையும் கொட்டி உள்ளது.

இதில் மயக்கம் அடைந்த அவர்களை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் சதீஷ்குமார்சிகிச்சை அளித்து வருகிறார்.