ராணிப்பேட்டையில் உள்ள பிஞ்சி ஆத்து கால்வாய் தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் அஜய் (வயது 21). தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராமு மகன் சாமுவேல் (22). அஜய், சாமுவேல் 2 பேரும் கஞ்சா விற்றதாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.