👉 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தமிழ் மொழி செழிக்க பாடுபட்ட ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் பிறந்தார்.

👉 1890ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பண்பலையைக் (FM) கண்டுபிடித்த எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி, செல்சியா என்ற இடத்தில் பிறந்தார்.

முக்கிய தினம் :-

சர்வதேச இடம்பெயர்வோர் தினம்


🌷 சர்வதேச இடம்பெயர்வோர் தினம் டிசம்பர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பிற்காக பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுகின்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்கள் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர். 

🌷 ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

பிறந்த நாள் :-

ஜெ.ஜெ.தாம்சன்


🌹 நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார்.

🌹 இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1906ஆம் ஆண்டு மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌹 பல பரிசுகள் பெற்று சிறந்து விளங்கிய தாம்சன் தன்னுடைய 83வது வயதில் (1940) மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நா.பார்த்தசாரதி


✍ தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார்.

✍ இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். 1983ஆம் ஆண்டு இவர் எழுதிய சாயங்கால மேகங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்கள் என்ற நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பல நூல்களை எழுதியிருக்கிறார்.

✍ கம்பராமாயணத் தத்துவக் கடல் விருது பெற்ற, நா.பார்த்தசாரதி 1987ஆம் ஆண்டு தனது 54வது வயதில் மறைந்தார். 

இன்றைய தின நிகழ்வுகள்.


👉கிமு 218 – திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன.


👉1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது.


👉1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.


👉1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.


👉1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.


👉1833 – உருசியப் பேரரசின் நாட்டுப்பண் சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்” முதல் தடவையாக பாடப்பட்டது.


👉1865 – அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.


👉1878 – அல்-தானி குடும்பம் கத்தாரின் ஆட்சியாளர்கள் ஆனார்கள்.


👉1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.


👉1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.


👉1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.


👉1935 – லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.


👉1939 – இரண்டாம் உலகப் போர்: உலகப் போரின் முதலாவது வான்போர் எலிக்கோலாந்து பைட் சண்டை இடம்பெற்றது.


👉1941 – ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் அந்நாட்டின் மீது படையெடுத்தது.


👉1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் சப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.


👉1958 – உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், “ஸ்கோர்”, ஏவப்பட்டது.


👉1966 – சனிக் கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.


👉1973 – சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.


👉1973 – இசுலாமிய வளர்ச்சி வங்கி ஆரம்பிக்கப்பட்டது.


👉1981 – உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி து-160 சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.


👉1987 – லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.


👉1990 – ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.


👉1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.[2]


👉2005 – சாட் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.


👉2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.


👉2006 – மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 118 பேர் உயிரிழந்தனர்.


👉2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றது.


👉2012 – தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.


👉2017 – வாசிங்டன், ஒலிம்பியா நகருக்கருகில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.


👉2019 – அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்கக் கீழவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 33 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


இன்றைய தின பிறப்புகள்


👉1812 – என்றி பவர் ஐயர், தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. 1885)


👉1822 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. 1879)


👉1856 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1940)


👉1863 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)


👉1870 – சாகி, பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1916)


👉1878 – ஜோசப் ஸ்டாலின், சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953)


👉1890 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், பண்பலையைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)


👉1920 – சோதிர்மாய் பாசு, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1982)


👉1930 – வி. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1994)


👉1932 – நா. பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1987)


👉1933 – ஆலன் ஜோ. பார்டு, அமெரிக்க வேதியியலாளர்


👉1939 – கோ. சாரங்கபாணி, தமிழக எழுத்தாளர்


👉1943 – வில்லியம் ரீசு, அமெரிக்க சூழலியலாளர்


👉1946 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)


👉1946 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. 1977)


👉1946 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்க இயக்குநர்


👉1950 – சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி


👉1953 – சாரு நிவேதிதா, தமிழக எழுத்தாளர்


👉1955 – விஜய் மல்லையா, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி


👉1963 – பிராட் பிட், அமெரிக்க நடிகர்


👉1971 – பர்கா தத், இந்திய ஊடகவியலாளர்


👉1986 – உஸ்மான் கவாஜா, பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளர்


இன்றைய தின இறப்புகள்


👉1111 – அல் கசாலி, பாரசீக மெய்யியலாளர், இறையியலாளர் (பி. 1058)


👉1829 – லாமார்க், பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1744)


👉1892 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1804)


👉1988 – ஆர். ஆறுமுகம், மலேசியக் காற்பந்து வீரர்


👉1988 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1912)


👉1990 – எஸ். எம். ராமநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்


👉1998 – சி. சு. செல்லப்பா, தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1912)


👉2011 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1936)


👉2018 – துளசி கிரி, நேபாள பிரதமர் (பி. 1926)


இன்றைய தின சிறப்பு நாள்


👉பன்னாட்டுக் குடிபெயர்வோர் நாள்


👉தேசிய நாள் (கத்தார்)


👉குடியரசு நாள் (நைஜர்)