👉 புகழ்பெற்ற திரைப்பட நடிகை சாவித்திரி 1935ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் உள்ள சிறாவூரில் பிறந்தார்.


நினைவு நாள் :-


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

🌟 இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.

🌟 இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

🌟 உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.

🌟 1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.

🌟 தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.


பிறந்த நாள் :-


மாக்ஸ் முல்லர்

✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

✍ இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும்.

✍ ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று.

✍ இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார்.

✍ இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். 'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்' என்று போற்றிய இவர் 76வது வயதில் (1900) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

 👉1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினார்.

👉1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது.

👉1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.

👉1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.

👉1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.

👉1857 – இந்தியப் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான குவாலியர் கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.

👉1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.

👉1884 – வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.

👉1897 – வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.

👉1907 – மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

👉1916 – முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.

👉1917 – முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் யாக்கோப் யோன்சு என்ற போர்க் கப்பல் செருமனி நீர்மூழ்கிக் குண்டு வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது.

👉1917 – பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

👉1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.

👉1921 – இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இலண்டனில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

👉1922 – ஐரிய சுதந்திர நாடு உருவானது.

👉1928 – கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..

👉1957 – வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.

👉1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.

👉1977 – தென்னாபிரிக்கா “பொப்புதட்சுவானா”வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

👉1989 – மொண்ட்ரியாலில் ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

👉1991 – குரோவாசியாவில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.

👉1992 – அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.

👉1997 – சைபீரியாவில் உருசிய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.

👉2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.

👉2005 – சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

👉2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

👉2017 – எருசலேம் நகரை இசுரேலின் தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1698 – அந்தனி மூயார்ட், ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி (இ. 1767)

👉1732 – வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (இ. 1818)

👉1792 – இரண்டாம் வில்லியம், நெதர்லாந்து மன்னர் (இ. 1849)

👉1823 – மாக்ஸ் முல்லர், செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1900)

👉1863 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1914)

👉1892 – ருக்மிணி லட்சுமிபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1951)

👉1918 – ஆர்வி, தமிழக எழுத்தாளர் (இ. 2008)

👉1928 – சந்திரலேகா, இந்தியப் பரத நாட்டியக் கலைஞர் (இ. 2006)

👉1935 – சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1981)

👉1937 – டி. டி. குசலகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.

👉1988 – ரவீந்திர ஜடேஜா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்.

இன்றைய தின இறப்புகள்.


👉343 – நிக்கலசு, கிரேக்க ஆயர், புனிதர் (பி. 270)

👉1788 – நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1723)

👉1868 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (பி. 1821)

👉1889 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவர் (பி. 1808)

👉1892 – வெர்னர் வொன் சீமன்சு, செருமானியப் பொறியியலாலர் (பி. 1816)

👉1956 – அம்பேத்கர், இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. 1891)

👉1961 – பிரன்சு ஃபனோன், பிரான்சிய மருத்துவர் (பி. 1925)

👉1982 – க. கைலாசபதி, இலங்கைத் தமிழறிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் (பி. 1933)

👉1990 – துங்கு அப்துல் ரகுமான், 1வது மலேசியப் பிரதமர் (பி. 1903)

👉2001 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1930)

👉2005 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1923)

👉2009 – பினா ராய்,பிரபல இந்தி நடிகை.