✍ 2006ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
முக்கிய தினம் :-
தேசிய மாசு கட்டுப்பாடு தினம்
🌹 தேசிய மாசு கட்டுப்பாடு தினம் டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. போபால் நச்சுவாயு விபத்தில் மரணமடைந்தவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
🌹 தொழிற்சாலை பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை கையாளுவது பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மற்றும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இன்று உலக மாசு தடுப்பு தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
உலக கணினி கல்வி தினம்
🌺 உலக கணினி கல்வி தினம் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கணிப்பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாக செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
🌻 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் டிசம்பர் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா.சபை உறுதி செய்தது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ஒரு தீர்மானத்தின் மூலம் டிசம்பர் 2ஆம் தேதியை சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
பிறந்த நாள் :-
ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்
🌟 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார்.
🌟 ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்தச்சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
🌟 இவர் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தச்சோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தவர். உணவுப் பழக்கங்களே இதற்கு காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
🌟 வில்லியம் மர்பி, ஜார்ஜ் விம்பிள் ஆகியோருடன் இணைந்து, இவர் குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷpயஸ் ரத்தச்சோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இதற்காக இவர்களுடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1934ஆம் ஆண்டு பெற்றார்.
🌟 வாழ்நாள் முழுவதும் ரத்தச்சோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கிய ஜார்ஜ் மினாட் தனது 64வது (1950) வயதில் மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.
1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான்.
1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்தார்.
1843 – யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.[1]
1848 – முதலாம் பிரான்சு யோசப்பு ஆத்திரியாவின் பேரரசராக முடிசூடினார்.
1851 – புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் லூயி-நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் இரண்டாம் குடியரசைக் கலைத்தார்.
1852 – மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசராக முடிசூடினார்.
1859 – அடிமை ஒழிப்பு செயற்பாட்டாளரும் போராளியுமான ஜான் பிரவுன் மேற்கு வர்ஜீனியாவில் அக்டோபர் 16 இல் நடத்திய முற்றுகைக்காக தூக்கிலிடப்பட்டார்.
1908 – பூயி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
1942 – மன்காட்டன் திட்டம்: என்ரிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்படப் பல கப்பல்கள் மூழ்கின.
1946 – பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
1947 – பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து எருசலேமில் கலவரம் மூண்டது.
1950 – கொரியப் போர்: வட கொரியாவிலிருந்து ஐநா படையினர் முற்றாக விலக்கப்பட்டனர்.
1954 – சீனக் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடு வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1956 – பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
1961 – பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
1970 – ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பமானது.
1971 – சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது. செவ்வாயில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1971 – அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.
1975 – பத்தே லாவோ என்பவர் லாவோசின் தலைநகர் வியஞ்சானைக் கைப்பற்றி, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசை அமைத்தார்.
1976 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1980 – எல் சல்வடோரில் நான்கு அமெரிக்கக் மதப்பரப்புனர்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1982 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
1984 – ஒதியமலைப் படுகொலைகள்: முல்லைத்தீவு மாவட்டம், ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1988 – பெனசீர் பூட்டோ பாகித்தானின் முதல் பெண் பிரதமரானார்.
1989 – மலேசிய - தாய்லாந்து அரசுகளுக்கும் மலாயக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தை அடுத்து மலேசியக் கம்யூனிசக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1990 – ஒன்றுபட்ட செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் எல்முத் கோல் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற உக்ரைனை கனடாவும் போலந்தும் முதல் நாடுகளாக அங்கீகரித்தன.
1993 – கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எசுகோபர் மெதெயின் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
1993 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
1999 – பெல்பாஸ்ட் உடன்பாடு: ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் அரசியலதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொண்டது.
2002 – இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
2006 – பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
2006 – பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – கலிபோர்னியா, ஓக்லாந்தில் களஞ்சியச் சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய பிறப்புகள்
1859 – யோர்ச் சோரா, பிரான்சிய ஓவியர் (இ. 1891)
1880 – க்ஷிதி மோகன் சென், வங்காள எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1960)
1885 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1950)
1912 – நாகிரெட்டி, திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 2004)
1930 – கேரி பெக்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)
1933 – கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
1937 – மனோகர் ஜோஷி, மகாராட்டிராவின் 15வது முதலமைச்சர்
1946 – டேவிட் மெக்காலே, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
1960 – சில்க் ஸ்மிதா, தென்னிந்திய நடிகை (இ. 1996)
1963 – சிவா ஐயாதுரை, இந்திய-அமெரிக்க கணினி அறிவியலாளர், தொழிலதிபர்
1963 – நெப்போலியன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
1973 – மோனிக்கா செலசு, செர்பிய-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
1978 – நெல்லி ஃபர்ட்டடோ, கனடியப் பாடகி, நடிகை
1981 – பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்கப் பாடகி, நடிகை
1982 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
இன்றைய இறப்புகள்
1547 – எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய தேடலறிஞர் (பி. 1485)
1594 – கிரார்துசு மெர்காதோர், பிளெமிய கணிதவியலாளர், நிலப்படவரைவாளர் (பி. 1512)
1881 – ஜென்னி வான் வெசுட்பலென், செருமானிய எழுத்தாளர், கார்ல் மார்க்சின் மனைவி (பி. 1814)
1911 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
1933 – எஸ். ஜி. கிட்டப்பா, நாடக நடிகர், பாடகர் (பி. 1906)
1971 – வீ. கே. வெள்ளையன், இலங்கைத் தொழிற்சங்கவாதி, மலையக அரசியல்வாதி (பி. 1918)
1973 – வை. பொன்னம்பலம், தமிழ்ப் புலவர், தமிழாசிரியர் (பி. 1904)
1985 – பிலிப் லர்கின், ஆங்கிலேயக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1922)
1987 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914)
1993 – பப்லோ எசுகோபர், கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவர் (பி. 1949)
2002 – ஐவன் ஈலிச், ஆத்திரியப் போதகர், மெய்யியலாளர் (பி. 1926)
2008 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)
2014 – ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (பி. 1929)
2015 – எம். ஏ. எம். ராமசாமி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)
2016 – கோ. சி. மணி, தமிழக அரசியல்வாதி (பி. 1929)
இன்றைய சிறப்பு நாள்
பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள்
ஐக்கிய அமீரகத் தேசிய நாள்
தேசிய நாள் (லாவோஸ்)