Theft of dal and palm oil from a ration shop in Vakil Street, Ranipet


ராணிப்பேட்டை பிஞ்சி பேரி காலனியில், வக்கீல் தெருவில் உள்ள ரேஷன் கடை எண் 2ல் நேற்று முன் தினம் இரவு மர்மதிருட்டு ஆசாமிகள் மேல் மாடியில் இருந்து உள்ளே புகுந்து ஒரு மூட்டை பருப்பும் மற்றும் பாமாயில் 2 பெரிய பாக்ஸ்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து, பருப்பு மற்றும் பாமாயிலை திருடிச் சென்ற மர்ம திருட்டு ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.