The youth was arrested for selling alcohol in the Palani Pettai area of Arakkonam
அரக்கோணம் பழனி பேட்டை பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் டவுன் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு உள்ள அரசு மதுபான கடை அருகில் ஒருவர் மது விற்பனை செய்துள்ளார்.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 16 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.