தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைய உள்ளது. சினிமா வாழ்க்கை அனுபவங்களை தமன்னா பகிர்ந்துள்ளார். 
அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் மும்பையில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது 15 வயதில் சினிமாதுறையில் அடி எடுத்து வைத்தேன். முதலில் 'சான்ந் சா ரோஷன் செஹாரா' என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்த படம் தோல்வியை சந்தித்தது. அதே ஆண்டுதெலுங்கில் ‘ஸ்ரீ' என்னும் படத்தில் நடித்தேன். அதுவும் வெற்றி பெறவில்லை. 

இனி அவ்வளவுதான் என்று நினைத்தபோது 'ஹேப்பி டேஸ்' படம் மூலம் சேகர் கம்முலா என்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் படங்கள் குவிந்தன. தமிழ் தெலுங்கு என தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. 

பல படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியும் ரசிகர்களின் பாராட்டை பெற்றேன். இன்னும் நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.