Special worship in temples in the Fist day of month Margazhi tomorrow

மார்கழி மாதம் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மாதமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த புனித மான மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாள் பாவை நோன்பு இருந்து திருப்பாவைபாடி இறுதியில் கடவுள் அவதாரமான ரங்கநாதரை மணமுடித்தாள். மார்கழி மாதம் அதிகாலையில் நீராடி தங்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி பூஜை செய்து வழிபடுவார்கள். அதன்படி வாலாஜாவில் உள்ள அனைத்து தெருக்களிலும் அதிகாலை 5 மணியளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நீராடி விட்டு தங்கள் வீட்டு வாசலில் அழகான அரிசி கோலமிட்டு, அகல் விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வார்கள்.தொடர்ந்து, சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து மற்றவர்களுக்கு வழங்குவார்கள்.

இதேபோல் அனைத்து கோயில்களிலும் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாளை அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வாலாஜாவில் உள்ள மிக பழமையான வரதராஜ பெருமாள், காசிவிஸ்வநாதர், ஏகாம்பரநாதர், சீனிவாசபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்களால் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாடப்படுகிறது.