காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சோளிங்கர் நீதித்துறை நடுவர் நேற்று தீர்ப்பளித்தார்.
சோளிங்கர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இரண்டு காசோலை மோசடி வழக்கில் சோளிங்கரை சேர்ந்த ராஜா மனைவி ஜெகதீஸ்வரி என்பவருக்கு இரண்டு காசோலை மோசடி வழக்குகளில் கடந்த 15.6.2019ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பில் இரு வழக்குகளிலும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஜெகதீஸ்வரி காசோலை மோசடி வழக்குகளில் எவ்வித மேல்முறையீடும் செய்யாமல் கடந்த மூன்றரை ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.
இதையடுத்து கடந்த 13ம் தேதி சோளிங்கர் போலீசார் தலைமறைவாக இருந்த ஜெகதீஸ்வரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரித்த சோளிங்கர் நீதித்துறை நடுவர் நிலவரசன், தண்டனை காலத்தை அனுபவிக்க ஜெகதீஸ்வரியை வேலூர் பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.