வேலூர் பாலாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. இறந்தவர் யார்? அவரை யாராவது கொலை செய்து சட லத்தை ஆற்றில் வீசி சென்றார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் பழைய மேம்பாலம் அரு பழைய மேம்பாலம் அருகில் பாலாற்றில் சடலம் மிதப்பதாக வடக்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், தண்ணீரில் மிதந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர்.
ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது போன்று சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர். தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு சடலத்தை ஆற்றில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் மாயமானவர்கள் குறித்து ஏதேனும் புகார்கள் உள்ளதா எனவும் காவல் நிலையங்களில் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.