கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய் ஜோடியாக ‘வாரிசு' படத்தில் நடித்து இருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படம் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றார். இந்தி படங்களிலும் நடிக்கிறார்.
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த 'வாரிசு' படவிழாவில் பங்கேற்று விஜய்யுடன் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடினார். 'கில்லி' படம் பார்த்து விஜய் ரசிகையாக மாறிய தாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் வாரிசு படவிழாவில் ரசிகர்கள் அளித்த ஆதரவினால் நெகிழ்ந்து போய் வெளியிட்டுள்ள பதிவில், ”எங்களை நீங்கள் சந்திக்க வந்ததற்கு நன்றி.
உங்களுடைய அன்பை உணர்கிறோம். இதை உங்களுக்கு திருப்பி செலுத்த ஒரே வழிதான் உள்ளது. அதுதான் பாடல்கள். உங்களை சந்திக்க விருப்பம் உள்ளது. ஆன்லைனிலாவது உங்களை சந்திக்கிறேன். உங்களோடு நேரம் செல வழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.