வேலூர் மின்பகிர்மான வட்டம் கார்ணாம்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே வருகிற 20-ந் தேதி (செவ்வாய் கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை விண்ணம் பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்க்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டி பள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, மேலகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை காட்பாடி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் பரிமளா தெரி வித்துள்ளார்.