ராணிப்பேட்டை மாவட்டத் தில் மகளிர் திட்டம் சார்பாக தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்டத்தின் கீழ், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற கவுசல்யா போஜனா என்ற திட்டத்தின் மூலம் கிராமபுறத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர்களுக்கு தனியார்துறை மூலம் வேலை வாய்ப்பு அல்லது பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திருவிழா மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

பல்வேறு தனியார் நிறுவனங்களில் தனியார் துறை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் மற்றும் அரசுநிறுவனங்களின் வேலை வாய்ப்பு குறித்து திட்ட செயல் விளக்கம் நடைபெற உள்ளதால், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

வருகிற 7-ந் தேதி காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8-ந்தேதி சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 15-ந் தேதி வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 16-ந் தேதி நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 17-ந் தேதி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 23-ந் தேதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டி யன் தெரிவித்துள்ளார்.