குறள் : 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.


மு.வ உரை :

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல் சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

கலைஞர் உரை :

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்

சாலமன் பாப்பையா உரை :

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா?மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.


Kural 979

Perumai Perumidham Inmai Sirumai

Perumidham Oorndhu Vital


Explanation :

Freedom from conceit is (the nature of true) greatness (while) obstinacy therein is (that of) meanness.Horoscope Today: Astrological prediction for December 31 2022


இன்றைய ராசிப்பலன் - 31.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam31-12-2022, மார்கழி 16, சனிக்கிழமை, நவமி திதி மாலை 06.33 வரை பின்பு வளர்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் பகல் 11.47 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பகல் 11.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 31.12.2022 | Today rasi palan - 31.12.2022

மேஷம்

இன்று நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும்.

ரிஷபம்

இன்று சகோதர சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். 

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் பிற்பகலுக்கு பின் நற்பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.47 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். தூர பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. 

துலாம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் அவை சுப செலவுகளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக பகை நீங்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பணப் பிரச்சினை ஓரளவு தீரும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

கும்பம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன்கள் குறையும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001