குறள் : 956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார்.
மு.வ உரை :
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர் வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
கலைஞர் உரை :
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்
சாலமன் பாப்பையா உரை :
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.
Kural 956
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra
Kulampatri Vaazhdhum En Paar
Explanation :
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
Horoscope Today: Astrological prediction for December 07 2022
இன்றைய ராசிப்பலன் - 07.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 07.12.2022 | Today rasi palan - 07.12.2022
மேஷம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் பொறுப்புடன் செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்க முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். கொடுத்த கடன் வசூலாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் அமையும். பகைவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிம்மம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். அடுத்தவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறைந்து தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணம் உண்டாகும்.