மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழையின்போது சாலை ஓரங்களில் மரங்கள் ஏதேனும் விழ நேர்ந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள், ஜெ.சி.பி இயந்திரம் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
- அரக்கோணம்- 04177 236360,
- ஆற்காடு 04172 - 04172 235568,
- வாலாஜா 04172 299808,
- சோளிங்கர் - 04172 290800,
- நெமிலி - 04177 247260,
- கலவை - 04173 290031
ஆகிய எண்களில் பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் மழை நேரங்களில் அவசியப் பணிகளின்றி மற்ற நேரங்களில் வெளியில் செல்வதையும், பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்திடவும், அதிக குளிர் இருக்கும் எனக் கருதப்படுவதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும், குழந்தைகளையும் அவரவர் வீடுகளிலேயே பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும். மழைக் காலங்களில் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும் நடைமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.