ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அவரைக்கரை தெங்கால் பகுதியை சேர்ந்தவர் நவசீலன் (வயது 56). இவர் ஆற்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். தற்போது வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை வேலை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி சென்றார். ரத்தினகிரியை அடுத்த தென்நந்தியாலம் அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.