திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டிகள் வேலூர் எம்.ஆர். பாக்சிங் அகாடமியில் நடைபெற்றது. 

இதில் முத்துரங்கம், ஊரீசு உள்ளிட்ட 30 கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் போட்டிகளை தொடங்கி வைத்தார். 

இதில் ஊரீசு கல்லூரி முதல்வர் நெல்சன் விமலநாதன், பாக்சிங் அகாடமி உரிமையாளர் பாக்சர்ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்கள் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.