Arcot: Worms in ice cream, shocked customers argue



ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இந்த கடைக்கு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காதல் ஜோடிகள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடு வது வழக்கம். 

இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தனது மகளுடன்  கடைக்கு சென்று ஃப்ரூட்ஸ் ஐஸ்கிரீமில் சாப்பிட்டுள்ளார். அப்போது அதில்புழுக்கள் நெளிந்தவாறு காணப்பட்டதாகக்கூறி, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் (பொறுப்பு) கந்தவேல், ஆற்காடு வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி, வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பார்வையிட்டு கடையில் பயன்பாட்டிற்காக வைக்கப் பட்டிருந்த ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.