ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பயிற்சி மையத்தில் கபடி பயிற்சி அளிக்க பயிற்றுனர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில் ஆர்வமுள்ள ஆண், பெண் பயிற்றுனர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியட்டுள்ள செய்தி குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ளது (எஸ்டிஏடி) விளையாட்டு இந்தியா திட்டத்தின் விளையாட்டு இந்தியா மையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30ஆண்கள்,30 பெண்களுக்கு கபடி பயிற்சி அளிக்கப்பட இதற்காக ஒரு பயிற்றுனர் நியமிக்கப்பட உள்ளார்.
இந்த பணிக்காக பயிற்றுனர் விண்ணப்பிப்பவர்கள் மாவட்டத்தில் கடந்த கால விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் 11 மாதங்கள் மட்டும் பயிற்றுனராக பணிபுரிய வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.18,000 ஆகும். இதில் ஆர்வமுள்ள நபர்கள் ஆண்கள், பெண்கள் விடுதி, நேரு நகர், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம் என்ற முகவரியில் 02.12.2022 முதல் 10.12.2022 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி வழங்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703462 என்ற செல் போன்எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.