வன்னிவேடு ஊராட்சியில் கலவை தனியார் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி நடந்தது.
வேளாண் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, கலவை தனியார் வேளாண்மை கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இளங்கலை அறிவியல் வேளாண்மை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக 'கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அம் மாணவர்களுக்கு வாலாஜா அடுத்த வன்னிவேடு ஊராட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இயற்கை விவசாயம், வேளாண் முறையில் நவீன தொழில்நுட்பம், மதிப்பு கூட்டு முறையில் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து அந்த கிராமத்தில் பிரசாரம் செய்தனர்.

தொடந்து இங்குள்ள தென்றல் நகர் பகுதியில் நடந்து வரும் என்எஸ்எஸ் பயிற்சி பெறும் மாணவர்களுடன் இணைந்து வேளாண் கல்லூரி மாணவர்கள் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து இந்த அனுபவ பயிற்சி பல்வேறு கிராமங்களில் நடைபெறும் என வேளாண் மாணவர்கள் தெரிவித்தனர்.