குறள் : 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
மு.வ உரை :
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர் புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை :
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்
சாலமன் பாப்பையா உரை :
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
Kural 962
Seerinum Seeralla Seyyaare Seerotu
Peraanmai Ventu Pavar
Explanation :
Those who desire (to maintain their) honour will surely do nothing dishonourable even for the sake of fame.
Horoscope Today: Astrological prediction for December 14 2022
இன்றைய ராசிப்பலன் - 14.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
14-12-2022, கார்த்திகை 28, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 11.42 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு பூரம். சித்தயோகம் பின்இரவு 05.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 14.12.2022 | Today rasi palan - 14.12.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வங்கி மூலம் எதிர்பார்த்த கடன் உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சற்று லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழிலில் பணியாட்கள் பொறுப்புடனும், ஆதரவுடனும் செயல்படுவார்கள்.
கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.
துலாம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கப்பெறும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சுப செலவுகள் செய்யும் வாய்ப்பு அமையும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெறலாம்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001