குறள் : 955

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.


மு.வ உரை :

தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும் பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

கலைஞர் உரை :

பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்

சாலமன் பாப்பையா உரை :

தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.


Kural 955

Vazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti

Panpil Thalaippiridhal Indru

Explanation :

Though their means fall off those born in ancient families will not lose their character (for liberality).


Horoscope Today: Astrological prediction for December 06 2022


இன்றைய ராசிப்பலன் - 06.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

06-12-2022, கார்த்திகை 20, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 06.48 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் காலை 08.38 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகை விரதம். அண்ணாமலை தீபம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


இன்றைய ராசிப்பலன் - 06.12.2022 | Today rasi palan - 06.12.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். 

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு காலையிலேயே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.

கன்னி

இன்று தொழிலில் வேலையாட்களால் மன அமைதி குறையலாம். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். மதியத்திற்கு பின் மன உளைச்சல்கள் குறைந்து சாதகமான சூழ்நிலை உருவாகும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.03க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் நிறைவேறும். 

மகரம்

இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு அனு-கூலமான பலன் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.

மீனம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் சற்று பொறுமை காப்பது நல்லது. வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001