தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்தில் சிக்கியது. அவருடைய காருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் அவர் காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார்.
தமிழகத்தை சுனாமி தாக்கிய நிகழ்வின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.26) கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷண் இன்று (டிச.26) காலை அஞ்சலி செலுத்த பட்டினப்பாக்கத்திற்கு வந்தார். அப்போது எதிரில் வந்த சுற்றுலா வாகனம் மோதியதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷணனின் கார் சேதம் அடைந்தது. அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.