Ayyappa devotees' vehicle collided with an electric pole in Vellore


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பாணாவரத்தில் உள்ள இலங்கை அகதிகள் குடியிருப்பை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலம் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் நேற்று மினி வேனில் வீடு திரும்பினர்.

வேலூர் சேண்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள மின்விளக்கு கம்பத்தில் மினிவேன் மோதி நின்றது. இந்த விபத்தில் மின்கம்பம் கீழே விழுந்தது. இந்த விபத்தில் பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மினி வேனையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.