வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த அலுவலகம் உள்ளது. இங்கு மகளிர் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

இந்த அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் திடீரென விசாரணை மேற்கொள்ள சென்றனர். 

இதையொட்டி அலுவலகத்தில் வெளியாட்கள் உள்ளே வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், மகளிர் திட்ட அலுவலகம் குறித்து புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை செய்தோம். இது வழக்கமாக நடை பெறும் பணிதான். இந்த ஆய்வில் பணம் அல்லது பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றனர்.