8 Tamil Nadu players in the Indian team in the South Asian International Tennis Ball Cricket Tournament
தெற்காசிய அளவிலான சர்வதேச டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போகாராவில் (நேபாளம்) வரும் டிசம்பர் 29-ம் தேதி முதல் ஜனவரி 02, 2023 வரை நடைபெறவுள்ளது.
இதில் இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான இந்திய அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர்கள் எட்டு பேர், வீராங்கனைகள் 6 பேர் மற்றும் ஜூனியர் அணியில் 2 வீரர்கள், 4 வீராங்கனைகள் தேர்வாகி தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணியில் முந்தைய செயல்திறன் மற்றும் தமிழகத்தின் சிறந்த வீரர்களின் அடிப்படையில் கீழே உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சீனியர் வீரர்கள்
1.கார்த்திக் - இராணிப்பேட்டை மாவட்டம்
2.விமல்ராஜ் - இராணிப்பேட்டை மாவட்டம்
3.பிரசாந்த் - இராணிப்பேட்டை மாவட்டம்
4.சதீஷ் - திருவள்ளூர் மாவட்டம்
5. மணிகண்டன் - இராணிப்பேட்டை மாவட்டம்
6. சரத் - இராணிப்பேட்டை மாவட்டம்
7. ரவிகுமார் - இராணிப்பேட்டை மாவட்டம்
8. ஜெயபிரகாஷ் - கன்னியாகுமரி மாவட்டம்
சீனியர் வீராங்கனைகள்
1. நவீனா - நாமக்கல் மாவட்டம்
2. ஓவியா - நாமக்கல் மாவட்டம்
3. ஜெயகார்த்திகா - நாமக்கல் மாவட்டம்
4. நந்தினி - நாமக்கல் மாவட்டம்
5. லிக்கிதா ஸ்ரீ - நாமக்கல் மாவட்டம்
6. ஸ்ரீமதி - நாமக்கல் மாவட்டம்
ஜூனியர் வீரர்கள்
1.பிரவீன் குமார் - இராணிப்பேட்டை மாவட்டம்
2. தெண்டுல்கர் - இராணிப்பேட்டை மாவட்டம்
ஜூனியர் வீராங்கனைகள்
1. விக்னேஷ்வரி - இராணிப்பேட்டை மாவட்டம்
2. பிருந்தா - இராணிப்பேட்டை மாவட்டம்
3. ரேவதி - இராணிப்பேட்டை மாவட்டம்
4. தமிழ்ச்செல்வி - இராணிப்பேட்டை மாவட்டம்
இவர்களை தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் P.ஞானவேல், துணைத்தலைவர் A.E. நரசிம்மன், டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் R.முனிரத்தினம், தமிழக அணி பயிற்சியாளர்கள் S.விநாயகம், A.வடிவேலு ஆகியோர் பாராட்டி வெற்றி பெற வாழ்த்தினர்.