காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பால வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திருப்பதியில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு பஸ் வந்தது. அதில் சோதனை செய்த போது சந்தேகப்படும்வகையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி னர். 

விசாரணையில் அவர் வாலாஜா சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 22) என்பதும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நந்தகுமார் (21) என்பவரும் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே வழக்கில் வேலூரை சேர்ந்த அஜித், வாலாஜாவை சேர்ந்த நிஷாந்த், சிலம்பரசன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.