ஹெல் மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்த 50 பேருக்கு ஆற்காடு டவுன் போலீ சார் தலா 1,000 அபராதம் விதித்தனர்.
பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்போர். எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதன் மூலம் மொபட், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கின்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு முன்பு 100 விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டி களுக்கு தலா 1000 அப் ராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் புதிய அபராதம் விதிக்கும் நடை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் சப்-இன்ஸ் பெக்டர் மகாராஜன் தலைமையில் போலீசார் நேற்று ஆற்காடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த 50பேருக்கு தலா 1000 அபராதம் என ஐம்பதாயிரம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இது போன்று வாகன தணிக நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். ஒரே நானில் 50 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டது ஆற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.