✍ 2007ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
✍ 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தார்.
நினைவு நாள் :-
ஜெகதீஷ் சந்திர போஸ்
🌽 தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.
🌽 லண்டனில் இருக்கும்போது லார்ட் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.
🌽 கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் ஜெகதீஷ் சந்திர போஸ் இயற்பியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2/3 பங்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அவர்கள் முழு ஊதியத்தையும் வாங்க தகுதி அற்றவர்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் ஜெகதீஷ் சந்திர போஸின் அறிவுக்கூர்மையை பாராட்டி அவருக்கு முழு ஊதியமும் வழங்கப்பட்டது. நிலுவையில் இருந்த தொகையும் வழங்கப்பட்டது.
🌽 இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். இவர் இயற்றிய நூல்கள் Response in the Living and Non-Living மற்றும் The Nervous Mechanism of Plants.
🌽 ஜெகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியையும், புகழையும் ஈட்டினார். இந்தியாவின் புகழை உலகெங்கும் மிளிரச் செய்த இவர் தன்னுடைய 78வது வயதில் 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
சுரதா
🌟 கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன்.
🌟 பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார்.
🌟 செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ஆம் ஆண்டு சந்தித்தார். பின்பு சிறிதுகாலம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
🌟 இவர் மங்கையர்க்கரசி திரைப்படத்துக்கு 1944ஆம் ஆண்டு வசனம் எழுதினார். அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்பது போன்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.
🌟 பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
🌟 இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 84-வது வயதில் (2006) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.
1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார்.
1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர்.
1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன்.
1510 – இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர்.
1857 – ஐக்கிய இராச்சியத்தின் சிபெல்லா என்ற பயணிகள் கப்பல் கொழும்புக்கு அருகே மூழ்கியதில் நால்வர் உயிரிழந்தனர்.[1]
1867 – இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக மூன்று அயர்லாந்துத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1890 – நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்லெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1914 – மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.
1924 – அந்திரொமேடா "நெபுலா" உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தேயுள்ள பிறிதொரு விண்மீன் பேரடை என்ற எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு, முதற்தடடையாக நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்டது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ராவல்பிண்டி என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியப் போர்க் கப்பல்களினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: தரவா, மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.
1946 – வியட்நாம், ஆய் பொங் நகர் மீது பிரெஞ்சுக் கடற்படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1955 – கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆத்திரேலியாவுக்கு கைமாறியது.
1956 – தமிழ்நாடு, அரியலூரில் நடந்த தொடருந்து விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.
1959 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் ஸ்திராஸ்பூர்க் நகரில் "ஐரோப்பிய ஒருங்கிணைப்பு" பற்றிய தனது எண்ணங்களைத் தெரிவித்தார்.
1971 – சீனப் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
1974 – எத்தியோப்பியாவில் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட 60 பேர் இடைக்கால இராணுவ அரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1978 – கிழக்கு மாகாண சூறாவளி, 1978: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வீசிய கடும் புயலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற 6.9 அளவு நிலநடுக்கத்தினால் 4,800 பேர் வரை உயிரிழந்தனர்.
1985 – எகிப்தியப் பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
1992 – முதலாவது திறன்பேசி, ஐபிஎம் சைமன், லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோசு அருகில் வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
2001 – கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில் கையெழுத்திடப்பட்டது.
2003 – வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சே பதவி விலகினார்.
2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
2006 – ஈராக்கில் சாதிர் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டு 257 பேர் காயமடைந்தனர்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
2007 – அர்கெந்தீனாவுக்குத் தெற்கே எக்சுபுளோரர் என்ற பயணிகள் கப்பல் பனிமலை ஒன்றில் மூழ்கியதில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
2009 – மகுயிண்டனாவோ படுகொலை: பிலிப்பீன்சில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2011 – அரேபிய வசந்தம்: யெமனில் 11 மாதங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யேமனிய அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.
இன்றைய பிறப்புகள்
1837 – யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1923)
1864 – பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ, செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1793)
1869 – வால்டெமர் பவுல்சன், தென்மார்க்குப் பொறியியலாளர் (இ. 1942)
1872 – ஆஷ் துரை, பிரித்தானிய அரசி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர், நீதிபதி (இ. 1911)
1897 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1999)
1908 – நிக்கலாய் நோசவ், சோவியத் குழந்தைகள் எழுத்தாளர் (இ. 1976)
1916 – பி. கே. பேஜ், ஆங்கிலேய-கனடிய கவிஞர் (இ. 2010)
1921 – சுரதா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006)
1923 – ஏ. எல். சீனிவாசன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1977)
1926 – சத்திய சாயி பாபா, தென்னிந்தியத் துறவி, இந்து மெய்யியலாளர் (இ. 2011)
1926 – தி. சு. கிள்ளிவளவன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (இ. 2015)
1932 – செ. வை. சண்முகம், தமிழக மொழியியலாளர், கல்வெட்டாய்வாளர்
1939 – ஜீவா ஜீவரத்தினம், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1997)
1953 – பிரான்சீஸ் காப்ரே, பிரான்சியப் பாடகர்
1962 – நிக்கோலசு மதுரோ, வெனிசுவேலா அரசுத்தலைவர்
1972 – விஜயகலா மகேசுவரன், இலங்கை அரசியல்வாதி
1977 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, சமற்கிருத அறிஞர், அரசியல்வாதி (பி. 1923)
1979 – கெல்லி புரூக், ஆங்கிலேய நடிகை
1986 – நாக சைதன்யா, தெலுங்குத் திரைப்பட நடிகர்
1990 – பூர்ணிதா, தென்னிந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகை.
1992 – மைலே சைரஸ், அமெரிக்க நடிகை
இன்றைய இறப்புகள்
1826 – யோகான் எலர்ட் போடே, செருமானிய வானியலாளர் (பி. 1747)
1844 – தாமசு ஜேம்சு எண்டர்சன், இசுக்காட்டிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1798)
1910 – ஆக்டேவ் சானுட், அமெரிக்க கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடி (பி. 1832)
1937 – ஜகதீஷ் சந்திர போஸ், வங்காளதேச-இந்திய இயற்பியலாளர், உயிரியலாளர், தொல்லியலாளர் (பி. 1858)
1976 – ஆன்றே மால்றோ, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1901)
1976 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1907)
1977 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, சமக்கிருத அறிஞர் (பி. 1923)*1990 – ரூவால் டால், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1916)
1983 – லலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் (பி. 1930)
1990 – ரூவால் டால், பிரித்தானியப் புதின எழுத்தாளர் (பி. 1916)
1992 – மு. அருணாசலம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1909)
2003 – முரசொலி மாறன், தமிழக அரசியல்வாதி (பி. 1934)
2012 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி (பி. 1937)
2014 – செல்வா கனகநாயகம், ஈழத்துப் பேராசிரியர், எழுத்தாளர்
2016 – கே. சுபாஷ், தமிழ், இந்தித் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
இன்றைய சிறப்பு நாள்
திருத்தந்தை முதலாம் கிளமெண்டு திருவிழா (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூதரனியம்)