👉 1982ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வினோபா பாவே மறைந்தார்.


👉 2000ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.


👉 1959ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முகிலறையை (Wilson cloud chamber) கண்டுபிடித்த சார்லஸ் தாம்சன் ரீஸ் வில்சன் மறைந்தார்.


👉 1971ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இன்டெல் நிறுவனம் உலகின் வர்த்தக ரீதியிலான முதலாவது 4004 என்ற சிங்குள் சிப் Microprocessor-ஐ வெளியிட்டது.



பிறந்த நாள் :-


சானியா மிர்சா


🌹 இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா 1986ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். சானியா மிர்சா தனது சிறு வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்.


🌹 இவர் 2003ஆம் ஆண்டுமுதல் மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.


🌹 ஏப்ரல் 2015ஆம் ஆண்டு பேமிலி கோப்பை டென்னிஸ் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து இரட்டையர் பட்டத்தை வென்றதை அடுத்து இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றார்.


🌹 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மற்றும் 2012ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் மகேஷ் பூபதியுடன் இணைந்தும்' 2014ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பிரேசிலின் புருனோ சோரெஸ்டன் இணைந்தும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்நவம்பர் 15 - தமிழ் விக்கிப்பீடியா


இன்றைய நிகழ்வுகள்


565 – மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார்.


1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.


1532 – பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர்.


1533 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார்.


1705 – சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன.


1791 – முதலாவது அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.


1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் சேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.


1889 – பிரேசிலை குடியரசாக இரண்டாம் பெதுரோ அறிவித்தார். ஆனாலும் அதனை அடுத்து நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தார்.


1915 – வின்ஸ்டன் சர்ச்சில் லிபரல் அரசில் இருந்து பதவி விலகி, மேற்கு முன்னணியின் 6-வது படைப் பிரிவில் இணைந்தார்.


1920 – உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது அமர்வு ஜெனீவாவின் இடம்பெற்றது.


1922 – எக்குவடோர், உவயாகில் நகரில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


1928 – இங்கிலாந்தில் மேரி ஸ்டான்போர்டு ரை துறைமுகத்தில் மூழ்கியதில் அதன் அனைத்து 17 ஊழியரும் உயிரிழந்தனர்.


1933 – தாய்லாந்தில் முதற் தடவையாகப் பொதுத்தேர்தல் இடம்பெற்றது.


1941 – நாட்சி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.


1942 – இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் சப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.


1943 – பெரும் இன அழிப்பு: நாட்சி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.


1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.


1949 – நாத்தூராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் மகாத்மா காந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர்.


1966 – போயிங் 727 வானூர்தி ஒன்று பெர்லினில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.


1966 – ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.


1969 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி கே-19 அமெரிக்காவின் காட்டோ என்ற நீர்மூழ்கியுடன் பேரன்ட்சு கடலில் மோதி மூழ்கியது.


1969 – வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.


1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதலாவது வணிகரீதியிலான 4004 என்ற ஒற்றைச்சில் நுண்செயலியை வெளியிட்டது.


1978 – டக்ளஸ் டிசி-8 தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் உயிரிழந்தனர்.


1983 – வடக்கு சைப்பிரசின் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.


1987 – உருமேனிய சோசலிசக் குடியரசு, பிராசொவ் நகரில் தொழிலாளரக்ள் கம்யூனிச அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.


1988 – சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பியூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.


1988 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: பாலத்தீனம் தனிநாடாக பாலத்தீன தேசியப் பேரவையினால் அறிவிக்கப்பட்டது.


1990 – கம்யூனிச பல்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு புதிய குடியரசு நிறுவப்பட்டது.


1990 – அட்லாண்டிஸ் விண்ணோடம் எஸ்டிஎஸ்-38 விண்கலத்தை விண்ணுக்குக் கொண்டு சென்றது.


2000 – அங்கோலா, லுவாண்டாவில் அன்டோனொவ் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.


2000 – இந்தியாவில் சார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.


2002 – கூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.


2007 – வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.


2012 – சீ சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.


2018 – கஜா புயல் தமிழகத்தை குறிப்பாக டெல்டா பகுதிகளில் பெறும் சேதத்தை ஏற்படுத்தியது.


இன்றைய பிறப்புகள்


1738 – வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர், இசையமைப்பாளர் (இ. 1822)


1849 – மேரி எம்மா பிருடு, அமெரிக்க வானியலாளர் (இ. 1934)


1875 – பிர்சா முண்டா, இந்தியப் புரட்சியாளர், விடுதலைப் போராட்டப் போராளி (இ. 1900)


1877 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1945)


1885 – கிஜூபாய் பதேக்கா, இந்தியக் கல்வியாளர் (இ. 1939)


1887 – ஜோர்ஜியா ஓ'கீஃப், அமெரிக்க ஓவியர் (இ. 1986)


1891 – இர்வின் ரோமெல், செருமானிய இராணுவ அதிகாரி (இ. 1944)


1901 – பு. இரா. புருடோத்தமர், தமிழ், வைணவ அறிஞர் (இ. 1976)


1914 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி (இ. 2014)


1921 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர், வானொலி செய்தி வாசிப்பாளர் (இ. 2008)


1923 – கே. வீ. நாராயணசுவாமி, கேரள கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் (இ. 2002)


1923 – ராதா பர்னியர், சென்னை பிரம்மஞானசபை தலைவி (இ. 2013)


1933 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (இ. 1987)


1947 – மால்கம் ரஞ்சித், இலங்கை கத்தோலிக்கக் கருதினால்


1986 – சானியா மிர்சா, இந்திய டென்னிசு வீராங்கனை


1991 – சைலீன் வூட்லி, அமெரிக்க நடிகை


இன்றைய இறப்புகள்


1280 – பெரிய ஆல்பர்ட், செருமானிய இறையியலாளர், மெய்யியலாலர் (பி. 1193)


1630 – யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1571)


1856 – மதுசூதன் குப்தா, இந்திய மருத்துவர் (பி. 1800)


1908 – டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (பி. 1835)


1917 – எமில் டேர்க்கேம், பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (பி. 1858)


1937 – ஜெய்சங்கர் பிரசாத், இந்திய எழுத்தாளர் (பி. 1889


1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)


1949 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)


1959 – சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய இயற்பியலாளர் (பி. 1869)


1982 – வினோபா பாவே, இந்திய காந்தியவாதி (பி. 1895)


2012 – கே. சி. பாண்ட், இந்திய அரசியல்வாதி (பி. 1931)


2016 – சோழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1960)


2020 – சௌமித்திர சாட்டர்ஜி, இந்திய வங்காள நடிகர் (பி. 1935)


இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (பாலத்தீனம் 1988)


அமைதி நாள் (கோட் டிவார்)


குடியரசு நாள் (பிரேசில்)


தேசிய மர நடுகை நாள் (இலங்கை)