🌺 1895ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்க காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.
முக்கிய தினம் :-
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
🌻 சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 5ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாட, ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிறந்த நாள் :-
சித்தரஞ்சன் தாஸ்
🌟 தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார்.
🌟 தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.
🌟 ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார்.
🌟 1923ஆம் ஆண்டு நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்று, சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டு வந்தவர் இவர் தான்.
🌟 சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் இவர் திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதி வைத்தார். இவர் தனது 54-வது வயதில் (1925) மறைந்தார்.
பனாரசி தாஸ் குப்தா
🌹 சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான பனாரசி தாஸ் குப்தா 1917ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஹரியானாவில் உள்ள ஜீந்த் மாவட்டத்தில், பிவானி என்ற இடத்தில் பிறந்தார்.
🌹 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டதால் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஜீந்த் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய இவர், சர்தார் வல்லபாய் படேலுடன் இணைந்து அதை சாதித்தார்.
🌹 1968ஆம் ஆண்டு நடைபெற்ற பிவானி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1972ஆம் ஆண்டு மீண்டும் வென்று சட்டமன்றத் தலைவரானார். மின்சாரம், பாசனம், விவசாயம், சுகாதாரம் ஆகிய பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு ஹரியானா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஹரியானா மாநிலம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது.
🌹 இவர் பாபுஜி என்று அன்போடு அழைக்கப்பட்டார். நாட்டு முன்னேற்றத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டே செயல்பட்டவர். சமூக மேம்பாடு, கல்வி, இலக்கியம், பத்திரிக்கைத் துறை ஆகிய பல களங்களில் முனைப்புடன் பாடுபட்ட பனாரசி தாஸ் குப்தா தன்னுடைய 89வது வயதில் (2007) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.
1605 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான்.
1688 – இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான்.
1757 – ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
1795 – இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.[1]
1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.[2]
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
1862 – அமெரிக்கா, மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 38 பேர் தூக்கிலிடப்பட்டனர்..
1872 – அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய சூசன் பிரவுன் அந்தோனி முதல் தடவையாக வாக்களித்தார். இதனால் இவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
1895 – தானுந்துக்கான முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.
1898 – பிலிப்பீன்சு, நெக்ரோசு தீவில் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, நெக்ரோசு குடியரசை நிறுவினர்.
1911 – செப்டம்பர் 29 இல் உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போரை அறிவித்த இத்தாலி திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1912 – ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1914 – முதலாம் உலகப் போர்: பிரான்சும் பிரித்தானியப் பேரரசும் உதுமானியப் பேரரசு ம் ஈது போர் தொடுத்தன.
1916 – போலந்து இராச்சியம் செருமனி, மற்றும் ஆத்திரியா-அங்கேரி பேரரசர்களினால் அறிவிக்கப்பட்டது.
1916 – வாசிங்டன், எவெரெட் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1917 – விளாதிமிர் லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1917 – அக்டோபர் புரட்சி: எசுத்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார். (பழைய நாட்காட்டியில் [அக்டோபர் 27]]).
1925 – சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய சைராணுவ சரக்குக் கப்பல் யார்விசு பே செருமனியின் போர்க்கப்பலால் தாக்கப்பட்டு மூழகடிக்கப்பட்டது.
1940 – பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: வத்திக்கான் மீது தாக்குதல் தொடங்கியது.
1945 – சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை தில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1970 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கப் படையினரின் ஒரு வார உயிரிழப்புகள் (24) கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என வியட்நாம் இராணுவ உதவிக் கட்டளையகம் அறிவித்தது.
1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
1995 – கனடா பிரதமர் சான் சிரேட்டியன் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
1996 – பாக்கித்தான் சனாதிபதி பாரூக் லெகாரி பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
2006 – 148 சியா முசுலிம்களை 1982-இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
2007 – ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.
2009 – டெக்சசு மாநிலத்தில் அமெரிக்க இராணுவ மேஜர் நைடல் மாலிக் அசனின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 காயமடைந்தனர்.
2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.
2017 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் கிறித்தவக் கோவில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்க்சி சூட்டில் 26 கொல்லப்பட்டு, மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இன்றைய பிறப்புகள்
1790 – சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ், செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (இ. 1838)
1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய அரசியல்வாதி (இ. 1925)
1885 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1981)
1888 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1945)
1892 – ஜே. பி. எஸ். ஹால்டேன், ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (இ. 1964)
1906 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (இ. 2004)
1913 – விவியன் லீ, இந்திய-பிரித்தானிய நடிகை (இ. 1967)
1916 – கனக செந்திநாதன், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 1977)
1918 – க. வேந்தனார், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1966)
1927 – கிர்ரோடுகு அகேய்கே, சப்பானிய புள்ளிவிபரவியலாளர் (இ. 2009)
1930 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 2011)
1930 – சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை அறிவிப்பாளர் (இ. 2001)
1930 – பூ. பழனியப்பன், இந்திய மகப்பேறு மருத்துவர்
1948 – பாப் பார், அமெரிக்க அரசியல்வாதி
1952 – வந்தனா சிவா, இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர்
1955 – கரண் தபார், இந்திய ஊடகவியலாளர்
1959 – பிரையன் ஆடம்ஸ், கனடியப் பாடகர், நடிகர்
1965 – பாம்கே ஜான்சென், டச்சு நடிகை
1968 – வர்ண ராமேஸ்வரன், ஈழத்துக் கருநாடக இசைப் பாடகர், மிருதங்கக் கலைஞர் (இ. 2021)
1987 – கெவின் கோனாஸ், கனடிய பாடகர் மற்றும் நடிகர். (ஜோனாஸ் சகோதரர்கள்)
1988 – விராட் கோலி, இந்தியத் துடுப்பாளர்
இன்றைய இறப்புகள்
1526 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1465)
1860 – சைமன் காசிச்செட்டி, இலங்கை தமிழறிஞர், அகராதியியலாளர், அரசியல்வாதி (பி. 1807)
1879 – ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1831)
1944 – அலெக்சிஸ் காரெல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (பி. 1873)
1992 – அர்பத் எலோ, அமெரிக்க இயற்பியலாளர், சதுரங்க ஆட்ட வீரர் (பி. 1903)
1992 – ஜான் ஊர்த், இடச்சு வானியலாளர் (பி. 1900)
2002 – கு. ப. சேது அம்மாள், தமிழக எழுத்தாளர் (பி. 1908)
2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர் (பி. 1942)
2011 – பூபேன் அசாரிகா, இந்தியப் பாடகர், இயக்குநர் (பி. 1926)
இன்றைய சிறப்பு நாள்
கை பாக்சு இரவு (ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், கனடா)
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்