ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக மீனாட்சி சுந்தரம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் 16 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த குமரேஷ்வரன், சென்னை இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, கோவை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கப் பணி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக மீனாட்சி சுந்தரம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்!
அவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.