குசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கால், பனப்பாக்கம்-பன்னியூர் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும், இதன் கிளை நதியான கல்லாற்றிலும் அதிகளவு தண்ணீர் வருவதால், அரக்கோணம் - நெமிலி சாலையில் சிறுணமல்லி அருகே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனிடையே, குசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பனப்பாக்கத்தில் இருந்து பன்னியூர் செல்லும் சாலையில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இதனால்,அந்தச்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக உளியநல்லூர், பெரப்பேரி, மகேந்திரவாடி, சிறுவளையம், பெருவளையம், கர்ணாவூர், களப்பலாம்பட்டு ஆகிய கிராமங்கள் பனப்பாக்கம் வரமுடியவில்லை.

நெமிலி வட்டாட்சியர் சுமதி, அந்தச் சாலையில் போக்குவரத்தைத் தடை செய்து, அங்கு வருவாய்த் துறையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, அந்த கிராமங்களில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.

குசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கால், அதன் கிளை நதியான கல்லாற்றிலும் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால், அரக்கோணம் நெமிலி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.