குறள் : 942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

மு.வ உரை :

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால் உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

கலைஞர் உரை :

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

சாலமன் பாப்பையா உரை :

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

Kural 942

Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin

Explanation :

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

Horoscope Today: Astrological prediction for November 23 2022


இன்றைய ராசிப்பலன் - 22.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

23-11-2022, கார்த்திகை 07, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 06.54 வரை பின்பு அமாவாசை திதி பின்இரவு 04.27 வரை பின்பு வளர்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் இரவு 09.37 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 23.11.2022 | Today rasi palan - 23.11.2022

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 4.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பெரியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

மிதுனம்

இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். உறவினர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

தனுசு

இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும். 

மகரம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். குடும்ப பிரச்சினைகளால் மனஅமைதி குறையும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிக்க முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். எடுத்த காரியங்கள் பாதியில் தடைபடும். உங்கள் ராசிக்கு மாலை 4.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001